சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி தனியார் CBSC பப்ளிக் பள்ளியின் சார்பாக 50 வது தேசிய அளவிலான பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
மொத்தம் 30 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இப் போட்டியில் 7 கிராண்ட் மாஸ்டர்கள் மூன்று சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட 150 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள், ஏழு கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட நூற்றி ஐம்பது சதுரங்க விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 11 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் நந்திதா 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். முதல் பரிசாக ரூபாய் 7 லட்சம் ரொக்கபரிசாக வழங்கப்பட்டது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா மற்றும் பத்மினி, கிரன் ஆகியோர் 8. 5 புள்ளிகளையும் பெற்றனர் இவர்களுக்கும் ரொக்கம் பரிசுகள் வழங்கப்பட்டன.