நொச்சி இலைகளை சுத்தம் செய்து அரைத்து 3 லிட்டர் கோமியம் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த கலவையை 70-80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். திரவம் அடர்த்தியாக இருந்தால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்த்து வடிகட்ட வேண்டும். 250 மில்லி தண்ணீரில் 150 கிராம் சோம்புத்தூள் கலந்து கிளற வேண்டும். இந்த கலவையை 50 மில்லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம்.