குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பாலி ரக வாட்டர் ஆப்பிளை நம்மூரிலும் விளைவிக்கலாம். இது மாடித்தோட்டம் மற்றும் விலை நிலங்களில் சாகுபடி செய்யலாம். மணல் கலந்த களிமண், சவுடு மண் உள்ளிட்ட பலவித மண்ணுக்கு ஏற்ற வகையில் இது வளர்கிறது. இது சீசனுக்கு மட்டும் விளைச்சல் கொடுக்காமல் ஆண்டு முழுவதும் மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு ரகமாகும். பிற ரக வாட்டர் ஆப்பிளை போல் இல்லாமல் குட்டையாக காணப்படும்.