ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உலகின் சிறந்த மத்திய வங்கியாளராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கரின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏ பிளஸ் மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். Global Finance ஆனது பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மற்றும் வட்டி விகிதங்களை நிர்வகித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு A முதல் F வரை தரங்களை ஒதுக்கி வருகிறது.