9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் கைது

56பார்த்தது
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் கைது
தெலங்கான மாநிலம் காமரெட்டி மாவட்டம் பன்சுவாடா நகரில் உள்ள போர்லம் சாலையில் ஒன்பது வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குற்றவாளி சோமேஷ்வர் சிறுமியை ஏமாற்றி வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சோமேஷ்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி