பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்

46437பார்த்தது
பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்
இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை பிராப்தி எலிசபெத் என்பவர் இந்த குற்றச்சாட்டை சமூக ஊடகம் வழியே தெரிவித்து உள்ளார். பிராப்தி வெளியிட்ட சமூக ஊடக பதிவில், அந்த இயக்குநரிடம் வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளன என குற்றச்சாட்டையும் பதிவிட்டு உள்ளார். 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜானேமன் படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார். இது இயக்குநர் சிதம்பரத்துக்கு அறிமுக படம்.

தொடர்புடைய செய்தி