வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா தொடங்கியுள்ளது. பத்து நாட்கள் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களை பாதுகாப்பதற்காக போக்குவரத்து காவலர்கள் அவர்களுக்கு பின்னால் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். இதன் மூலம் பின்னால் வரும் வாகனங்கள் நடந்து செல்பவர்களை கவனித்து பாதுகாப்பாக வாகனத்தை இயக்க முடியும்.