அடிபிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தடவி, இரவு முழுவதும் வைத்து விட்டு மறுநாள் காலை கழுவினால் பாத்திரம் பிரகாசமாகும். எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து சுமார் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவினால் பாத்திரம் சுத்தமாகும். கொக்கோகோலாவை ஊற்றி சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு கழுவினால் கறைகள் நீங்கிவிடும். தக்காளி சாஸை பாத்திரத்தில் நன்கு தடவி வைத்து விடுங்கள். அதில் இருக்கும் அமிலம் கறையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிவிடும்.