தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் (மதுப் பிரியர்கள்) நன்மதிப்பை பெறும் வகையில், டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி வரும் நவம்பர் மாதம் முதல் கோவை வடக்கில் உள்ள 166 கடைகளிலும், வடசென்னையில் உள்ள 100 கடைகளிலும் முதற்கட்டமாக டிஜிட்டல் நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. இதன்மூலம் மது பிரியர்கள் இனி கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை.