காசாவில் போர் மற்றும் போலியோ போன்ற சுகாதார பிரச்சனை தீவிரமடைந்து வரும் சூழலில், அங்கு 3 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளன; காசாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவருக்கு போலியோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடைக்கால போர் நிறுத்தத்தில், 6.4 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்தை செலுத்த ஐ.நா. அமைப்பு திட்டமிட்டுள்ளது.