பிரிட்டனைச் சேர்ந்த ஆணுறை நிறுவனமான DUREXன் இந்திய கிளையான DUREX INDIAவின் இணையதளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்தவர்களின் பெயர், முகவரி, ஆர்டர் தகவல்கள் உள்ளிட்ட தரவுகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. ORDER CONFIRMATION பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டால் இந்த தவறு நேர்ந்துள்ளதாக இதை கண்டுபிடித்த டெக் பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். ஆணுறை ஆர்டர் செய்பவர்கள் உஷாராக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.