முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை வெளியே விடுவதற்கான பணியை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.