சத்தீஸ்கரின் கரியாபந்த் மற்றும் தம்தாரி மாவட்ட எல்லையில் உள்ள ரகசிய தளங்களில் மாவோயிஸ்டுகளின் கிடங்கை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். அதில் வெடிபொருட்கள் மற்றும் ரூ.38 லட்சம் ரொக்கம் இருந்தது. மாவோயிஸ்டுகள் உள்ளூர் வியாபாரிகளிடம் லெவி என்ற பெயரில் பணம் வசூல் செய்து இரண்டு இடங்களில் பணத்தை மறைத்து வைத்துள்ளனர். பணத்துடன் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், 13 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.