2024ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை டாடா நிறுவனத்தின் Punch மாடல் கார் படைத்துள்ளது. மொத்தமாக 2,02,030 Tata Punch கார்கள் கடந்தாண்டில் விற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மாருதி சுசூகியின் WagonR(1,90,855), Ertiga(1,90,091) ஆகிய மாடல்களுடம் உள்ளன. இந்திய கார் சந்தையில் கடந்த 40 ஆண்டுகளாக மாருதி நிறுவன கார்களே இப்பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது அதனை டாடா நிறுவனம் தன் வசப்படுத்தியுள்ளது.