“என்னை கூப்பிட்டால் இந்திய அணிக்காக விளையாடுவேன். இல்லையென்றாலும் பரவாயில்லை. இந்திய அணி நன்றாகவே விளையாடுகிறது. அதனால் பிரச்னையில்லை. நான் எப்போதும் பாசிடிவாக இருக்கவே விரும்புவேன். முடிந்தளவு கடினமாக பயிற்சி மேற்கொள்வேன். இது என் ஆட்டத்தை மேம்படுத்தும்”
பெரும்பாலும் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு சஞ்சு சாம்சன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.