ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது அவருக்குப் பதிலாக முதலமைச்சராக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வந்து மீண்டும் முதல்வரானதால் அதிருப்தியடைந்த சம்பாய் சோரன் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.