மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கப்படாததைக் கண்டித்து, தி. மு. க. வின் சேலம் மாவட்டம் சார்பில் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம். எல். ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் எம். பி. டி. எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.