வரத்து குறைவால் கருணைக்கிழங்கு விலை உயர்வு

51பார்த்தது
வரத்து குறைவால் கருணைக்கிழங்கு விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விவசா யிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய் கறி மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். பெங் களூரு, ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பீன்ஸ், பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, இஞ்சி உள்பட பொருட் களும் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.

உழவர் சந்தைகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ. 80-க்கு விற்ற கருணைக்கி ழங்கு நேற்று ரூ. 100 முதல் ரூ. 110 வரை விற் பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் கரு ணைக்கிழங்கு கிலோ ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, 'தற் போது கருணைக்கிழங்கு சீசன் கிடையாது என்பதால் அதன் வரத்து உழவர்சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலையும் ரூ. 100- ஐ தாண்டி விற்கப்படுகிறது. வரத்து அதிகரித் தால் தான் அதன் விலை குறைய வாய்ப்புள் ளது' என்றனர்.

தொடர்புடைய செய்தி