ஏற்காட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது

80பார்த்தது
ஏற்காட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (வயது 32), பிரவீன்குமார் (28). இவர்கள் சேர்வராயன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்து சென்றார். பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என சப்-இன்ஸ்பெக்டர், அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக ஏற்காடு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், பிரவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி