லாரியில் மண் எடுத்து சென்ற வாகனத்தை போலீசார் எச்சரித்தனர்.

84பார்த்தது
லாரியில் மண் எடுத்து சென்ற வாகனத்தை போலீசார் எச்சரித்தனர்.
சேலம் மாவட்டம், பல்வேறு பகுதிகளில்  உள்ள ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். இந்நிலையில் விவசாயிகள் என்ற பெயரில் ஏரியில் இருக்கும் மண்ணை பொக்லின் இயந்திரம் கொண்டு டிராக்டர் மட்டுமல்லாமல் டிப்பர், டாரஸ் லாரியில்  பிளாட் நிலத்திற்காக ஏரியில் அதிக அளவில் ஆழப்படுத்தி மண்ணை எடுத்து பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. ஏரியில் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவது குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலை வருகிறது. இந்நிலையில் இளம்பிள்ளை வழியாக ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட டிராக்டர் , டிப்பர் லாரியில் மண்ணை அள்ளிக்கொண்டு அதி வேகமாக விற்பனைக்கு  வாகனத்தின் மேல் எந்த ஒரு பாதுகாப்பும் அமைக்கப்படாமல் அப்படியே செல்வதால் கல் மண் சாலையில் கொட்டி வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.   இதனை எந்த போலீசார் டிரைவரை கண்டித்து வந்தார். இதுகுறித்து பாக்குற ஓட்டுநர்கள் கூறுகையில், இளம்பிள்ளை வழியாக அதிக அளவில் ஏரி மண்ணை அள்ளிக்கொண்டு வாகனங்கள் மின்னல் வேகத்தில் வருவதால் எந்நேரமும் எங்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடும் எனவும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் வேதனையாக உள்ளது என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி