டிச.15-ம் தேதியை ஒட்டி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என கணிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.