வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுகுறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுகுறைந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. இது இன்றிரவு 9 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையும்" என தெரிவித்துள்ளார்.