வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க இயலாது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். மேலும், இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை. செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது. தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.