டெல்லியில் அரசு பேருந்தில் பயணிக்கும் டிக்கெட் எடுக்க வேண்டாம். ஆனால், அவர்கள் தங்களுடன் அழைத்துச்செல்லும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். தற்போது வைரலாகும் வீடியோவில் இதுதான் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவில் உடன் அழைத்து வந்த சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க முடியாது என அவரது தாய் நடத்துனருடன் சண்டையிடுகிறார். அதற்கு அந்த சிறுவன் டிக்கெட் எடுத்துவிடும்படி தனது தாயிடம் அழுதுகொண்டே கெஞ்சுகிறான். கடைசிவரை அப்பெண் டிக்கெட் எடுக்கவே இல்லை.