அண்ணா கூறியதைப்போல் வைக்கம் வெற்றியின் சின்னம். சமூக புரட்சியின் அடையாளமாக வைக்கம் திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கேரளாவில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "இயற்கை எழில் கொஞ்சும் தளம், கேரளா. கல்வியிலும், அரசியல் விழிப்புணர்விலும் முன்னேறியுள்ள மாநிலம், கேரளா. அப்படிப்பட்ட மண்ணில், சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக வைக்கம் பெரியார் நினைவகம் உருவாகியுள்ளது" என கூறியுள்ளார்.