இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியினர் நேற்று (டிச.12) அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு விமானத்தில் செல்வதற்காக பஸ்ஸில் விமான நிலையம் செல்லவிருந்தனர். 11 மணிக்கு புறப்படும் பேருந்தில் அனைத்து வீரர்களும் 8:30 மணிக்கே ஏறிவிட்டனர். ஆனால் ஜெய்ஷ்வால் மட்டும் வரவில்லை. இதனால் கோபமடைந்த ரோகித் அவரை அங்கு விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஜெய்ஷ்வால் கார் மூலம் சென்றுள்ளார்.