பெளர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். பிப். 23- ஆம் தேதி முதல் பிப். 26- ஆம் தேதி வரை சென்னை, நாமக்கல், தர்மபுரி, மேட்டூர், பெங்களூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.