சேலத்தில் விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு

6978பார்த்தது
ஆங்கில புத்தாண்டு 2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடினர்.

புத்தாண்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் மேற்பார்வையில் 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 150 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதே போன்று போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில் 40 இன்ஸ்பெக்டர்கள், 200-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் விடிய, விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஐந்து ரோடு பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி