சேலம் கொண்டலாம்பட்டி அருகே போலி டாக்டர் கைது

67பார்த்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே போலி டாக்டர் கைது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கனககிரி கிராமம் செட்டியார் காட்டை சேர்ந்தவர் பாலு என்ற பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் இயற்கை ஆயுர்வேதம் படித்துவிட்டு, வேம்படிதாளம் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாலு போலி டாக்டர் என தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி