காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை கண்டித்து சாலை மறியல்.

51பார்த்தது
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாகவும், இழிவாகவும் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 100-க்கு மேற்பட்டோர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையின் உருவப் பொம்மையை எரிக்க  முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இந்த ஆர்ப்பாட்டத்தில் மகுடஞ்சாவடி வட்டார தலைவர் ராஜா, மாவட்ட பொது செயலாளர்கள் அர்ஜுனன், விஜயகுமார், மாவட்ட துணை தலைவர் அருணாசலம், ஐஎன்டிசி நாகராஜ் , இடங்கணசாலை நகர தலைவர் சந்திரன் மற்றும் நீலமேகம் , சக்திவேல் , மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி