இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை கண்டித்து அ. தி. மு. க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இளம்பிள்ளை பேரூர் செயலாளர் கிருஷ்ணன் (பொறுப்பு) வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் அரியானூர் பழனிசாமி, இளம்பிள்ளை பேரூர் செயலாளர் துளசிராஜன், அவை தலைவர் வரதராஜன், பேரூர் துணை செயலாளர்கள் சேட்டு நடராஜ், சாந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.