சேலம் மாவட்டம் , ஜலகண்டாபுரத்தில் இருந்து மினி வேன் தேங்காய் பாரம் ஏற்ற இளம்பிள்ளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வளையசெட்டிபட்டி பிரிவு சாலை பகுதியில் டூவீலரில் ஒருவர் குறுக்கே வந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் துரை என்பவர் பிரேக் அடித்ததில் சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் வேன் மோதியதில் மின்கம்பம் சேதமற்றன. இதற்கு உண்டான தொகையினை மின்சார வாரியம் வசூல் செய்து உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர்.