சேலம் மா
வட்டம், இளம்பிள்ளை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி-வளர்மதி ஆகியோரின் மகன் சக்தி (28). சிவில் இன்ஜினியர் முடித்த இவர் ஒரு நிமிடத்தில் உடலை சுற்றி கயிறு இல்லாமல் இரு கைகளினால் பின்
னோக்கி ஸ
்கிப்பிங் செய்து மூன்றாவது முறையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது இத்தாலியின் மிலன் நகரில் ஒரு நிமிடத்தில் 49 ஸ்கிப்களை நிகழ்த்தி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
இதே போல் கடந்த 2018-ல் ரோம் நகரில் 48 ஸ்கிப்களையும், 2015-ல் கோயம்புத்தூரில் 46 ஸ்கிப்களையும் நிகழ்த்தி முதல் மற்றும் இராண்டாவது முறையாக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று வருவது குறித்து இவருக்கு பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன.