சங்ககிரி சிவன் ஆலயங்களில் பிரதேச சிறப்பு பூஜை

67பார்த்தது
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் கோயில்களில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வளர்பிரதோஷத்தையொட்டி
அருள்மிகு புவனேஸ்வரி அம்மன், பூதத்தாழீவார் நந்தி பகவான் பிச்சமூர்த்தி சுவாமிகளுக்கு திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக் கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி