சேலம்: அரசு பஸ் ஆக்சில் உடைந்ததால் பரபரப்பு

558பார்த்தது
சேலம்: அரசு பஸ் ஆக்சில் உடைந்ததால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பஸ்சில் ஆக்சில் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாணவ- மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலத்தின் இறக்கத்தில் வந்த போது திடீரென பஸ்சின் ஆக்சில் உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. இதை கேட்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் பஸ்சை ஓரமாக நிறுத்துமாறு டிரைவரிடம் தெரிவித்தனர்.

ஆக்சில் உடைந்ததை புரிந்து கொண்ட டிரைவர் பஸ்சை சாலையில் லாவகமாக ஓட்டி சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஓரமாக நிறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள், பயணிகள் நிம்மதி அடைந்து பஸ்சில் இருந்து வேகமாக கீழே இறங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி