தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21. 22. 23 ஆகிய தேதிகளில் சூரியன் அஸ்தம னம் ஆகும் நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்வை காணவும், பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளவும் நேற்று திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலை வரை சென்று மறைந்தது. மேற்கொண்டு ஒளி கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டபட்டது. இதை யடுத்து பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.