பிராமிஸ் டே அன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம். ஆனால், இந்த நாளில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் துணையிடம் நீங்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். பொய் வாக்குறுதிகள், அற்பமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். அளித்த வாக்குறுதிகளை மீறாதீர்கள், மறக்காதீர்கள். உங்கள் வாக்குறுதிகளை நினைவில் வைத்துக்கொண்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.