சீனா: சிச்சுவானில் பெண் ஒருவர் பாலால் செய்யப்பட்ட சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வு என்ற பெண், தனது சகோதரர் வாங்கி வந்த சிற்றுண்டியில், மாத்திரை அட்டைபோல் பேக் செய்யப்பட்டிருந்த பட்டாசை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டுள்ளார். வாயில் திடீரென வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்ட பிறகே அது பட்டாசு என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் வாயில் லேசான ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.