செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் இதுவரை இல்லாத அளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் AI மாநாட்டின் 2-வது நாளான இன்று உரையாற்றிய பிரதமர், AI தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுக்க உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை. AI வளர்ச்சிக்கு இந்தியா தனது நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. மேலும், AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறும் என்றார்.