தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.