சேலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

63பார்த்தது
சேலம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர்கள் திருவேரங்கன், கோவிந்தன், திருமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி சங்க மாநில தலைவர் வரதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு உள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி