சேலம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது, நாளை (பிப். 21) ஆத்தூர் வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.