முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இரவு 9:51 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சுயநினைவை இழந்த அவர், இரவு 8:06 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. சரியாக இரவு 9:51 மணிக்கு அவர் இறந்துவிட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.