முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்-க்கு, மூச்சுத்திணறல் பிரச்சனை தீவிரமடைந்ததால் ICUவிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மன்மோகன் சிங் இயற்கை எய்தினார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.