அரிட்டாபட்டியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், "மதுரையில் மேலூர் அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் போராட்டம் தொடரும்" என அறிவித்துள்ளார்.