சேலத்தில் மளிகை பொருட்கள் வாங்கி ரூ. 12½ லட்சம் மோசடி

65பார்த்தது
சேலத்தில் மளிகை பொருட்கள் வாங்கி ரூ. 12½ லட்சம் மோசடி
சேலத்தில் மளிகை பொருட்கள் வாங்கி ரூ. 12½ லட்சம் மோசடி செய்து தொடர்பாக மளிகைக்கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் பள்ளப்பட்டி லீ பஜார் பகுதியில் மொத்த மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வருபவர் மாரிமுத்து (வயது 46). வலசையூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (58). பெரமனூர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் மாரிமுத்துவிடம் ரூ. 15 லட்சத்து 96 ஆயிரத்து 925-க்கு பொருட்கள் வாங்கி உள்ளார்.
இந்த பணத்தை அவர் உடனடியாக கொடுக்கவில்லை. இதையடுத்து மாரிமுத்து அவரிடம் பலமுறை கேட்ட பிறகு ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 100 மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ. 12 லட்சத்து 57 ஆயிரத்து 825 கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து மாரிமுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாரிமுத்துவிடம், ரவிக்குமார் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரவிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி