பெங்களூரு, குஜராத்தில் HMPV வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில், கடந்த வாரங்களில் கொரோனாவைப் போன்று இப்புதிய வைரஸ் தொற்று பூதாகரமாகப் பரவத் தொடங்கியது. இந்நிலையில், இன்று இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, HMPV வைரஸ் தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.