பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே மோடி அரசு வைத்திருக்கிறது. மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.