கர்நாடகா: பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியரின் குடும்பம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உ.பி., மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த அனுப் குமார் (38), மனைவி ராக்கி (35), மகள் அனுப்ரியா (5), மகன் பிரியான்ஷ் (2) ஆகியோருடன் ஆர்எம்வி பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில், இன்று காலை அனைவரும் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தம்பதியினர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.