உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் இளஞ்சிவப்பு பெட்டிகளை நிறுவி, மாணவர்கள் தங்களது பிரச்சனைகளைப் புகாராக தெரிவிக்கலாம் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். அந்த வகையில், ஹர்தோய் பகுதியில் பள்ளியில் மாணவர் ஒருவர் தனது பென்சில் ஷார்ப்னரை சக மாணவர் திருடிவிட்டார் என மனு எழுதி புகார் பெட்டியில் போட்டுள்ளார். இதனை சிறிய விஷயமாக கருதாமல் இருதரப்பினரையும் விசாரித்து சுமூகமான முடிவை வழங்கியுள்ளனர்.